திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்செங்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. அந்த பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்பு மாணவிகள் புகை பிடித்ததாக தகவல் கூறப்படுகிறது. இதனால் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவிகளை தலைமை ஆசிரியர் அழைத்து கண்டித்துள்ளார். இது மட்டுமில்லாமல் மாணவியர்களின் பெற்றோர்களை தலைமை ஆசிரியர் வரவழைத்து மாணவியர்கள் தவறான செயல்களில் ஈடுபடுகின்றார்கள், ஆகையால் நீங்கள் மாற்றுச்சான்றிதழ்களை வாங்கி செல்லுங்கள் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஆசிரியர்கள் மாணவியர்களை தாக்கியதாகவும், 5 மாணவியர்களை தனி அறையில் வைத்து அடித்து, தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் இன்று காலை தனது தந்தை பயன்படுத்திய BP மாத்திரைகள் கொண்டு வந்து 2 தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி ஒருவர் மட்டும் உயர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
2 days ago
ஒற்றை யானை தாக்கி கோவில் பூசாரி பலி – கிராம மக்கள் சாலை மறியல்
2 days ago
தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர்
2 days ago
விபத்தில் முடிந்தது சாகச பயணம்
3 days ago
காட்டு தீயை கட்டுப்படுத்த வந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி
3 days ago
கப்பல் கட்டும் தளத்திற்காக போராடிய 25 பேர் மீது வழக்கு பதிவு
3 days ago
கீழே கிடந்த தங்க டாலரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு
3 days ago
மர குடோனில் பயங்கர தீ விபத்து : ரூ.1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள், அறுவை இயந்திரங்கள் தீயில் கருகி சேதம்
4 days ago
ஒற்றை யானை அட்டகாசம்: விளைநிலங்கள் சேதம் – விவசாயி கண்ணீர் மல்க கோரிக்கை!
5 days ago
கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் படகுடன் மீட்பு
6 days ago
இந்தியாவில் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்
Related Articles
ஜெய்பீம் விவகாரம் : மன்னிப்பு கோரிய ஞானவேல் : முற்றுப்புள்ளி வைக்க சீமான் கோரிக்கை!!
November 22, 2021
முடிவுக்கு வருகிறது மாஞ்சோலை சாம்ராஜ்யம்
May 13, 2024
Check Also
Close
-
செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீர் திறப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை!!November 7, 2021

