க்ரைம்

கேரளா : அட்டப்பாடி வனப்பகுதியில் 1,566 கஞ்சா செடிகள் அழிப்பு

தமிழக–கேரளா எல்லைப் பகுதியான கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா சாகுபடி நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது கடுக்மன்னா மலைச்சிகரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு மொத்தம் 1,566 கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, போலீசார் அந்த கஞ்சா செடிகளை கைப்பற்றி, தீயிட்டு அழித்தனர்.

மேலும், கஞ்சா சாகுபடியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button