கர்நாடக மாநிலம் ஹோலேமுரதட்டி வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலைக் கண்டு சரணடையுமாறு எச்சரித்துள்ளனர். இந்நிலையில் அந்த கும்பல் வனத்துறை ஊழியர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிராக வனத்துறையினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து, வனத்துறையினர் நடத்திய துப்பாக்கி தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மேலும், இச்சம்பவத்தில் வனத்துறை ஊழியர் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்த செய்தி பரவியதும், அப்பகுதி மக்கள் ஹனூரில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து ராமாபுரா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read Next
2 days ago
மொபைல் போன் மூலம் போலி லாட்டரிகள் விற்பனை – வீடியோ எடுப்பதை பார்த்து தெறித்து ஓடிய போலி லாட்டரி மாபியா கும்பல்
3 days ago
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப் பணி அலுவலர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
3 days ago
சமரச விழிப்புணர்வு பேரணி
3 days ago
காசநோய் மருத்துவப் பயனாளர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி
5 days ago
மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
5 days ago
நல்லா இருந்த ரோட்டை நாசமாக்கிய மாநகராட்சி – ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணி!
5 days ago
சட்டங்களை மதிக்காத கால்நடை வியாபாரிகள் – நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் , மாவட்ட காவல்துறை
5 days ago
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத் தேர்வுக்கான யோகா போட்டியில் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் பங்கேற்பு
5 days ago
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சைவ மீலாது நபி கந்தூரி விழா
6 days ago
