
தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வணிக வளாகத்தின்கீழ் தளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் பின்புற முள் காட்டுப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனங்கள் மற்றும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஆகியவை எறிய துவங்கியன. இந்த தவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல்வேறு பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமாகி உள்ளன. இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

