
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நல்வாழ்வு தூதர் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கு சமூக வலைதளத்தின் செயல்பாடுகள் அதிகமாக இருக்கக்கூடிய காரணத்தால் மாணவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை அந்தந்த கல்லூரிகள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை பள்ளிக்கல்வித்துறை சார்ந்த மானிய கோரிக்கையும் மாலை உயர் கல்வித் துறை சார்ந்த கோரிக்கையும் இருக்கிறதால் நாங்கள் அனைவரும் அதற்கு தயாராகி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து, விரைவில் மாணவர்களுக்கான 10 லட்சம் மடிக்கணினி வழங்கப்படுவதாகவும் அதற்காக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து ரூ.3200 கோடி மதிப்பீட்டில் 200 விடுதிகள் கட்டப்பட உள்ள நிலையில் இதன் மூலம் 2 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவதால் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினியை விரைவில் வழங்குவோம் என கூறியுள்ளார்.

