
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் இன்று இறுதி நாளாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,சுதந்திர தின விழாவில் நடிகை திரிஷா கலந்து கொண்டது குறித்த கேள்விக்கு, இந்த நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என கேள்வி எழுப்பிய அவர், தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவது குறித்து முழுமையான அரசாணை இன்னும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


