
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக, ஒகேனக்கல்–பென்னாகரம் பிரதான வனப்பகுதி சாலையில், சேந்துக்கிணறு பகுதியில் சாலையோரம் இருந்த புளியமரம் ஒன்று வேரோடு சாலையின் நடுவே சாய்ந்தது.
இதையடுத்து, மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர், மரத்தை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதால், ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் சுமார் 5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, 3 மணி நேரத்திற்கு பிறகு பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையில் விழுந்த மரம் அப்புறப்படுத்தப்பட்டது.



