தமிழகத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். இந்த அரிய தொண்டுகளை கருத்தில்கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் டாக்டர் அம்பேத்கர் விருதை தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த விருதுக்காக வழங்கப்படும் தொகை ரூ.5.65 லட்சத்தில் இருந்து ரூ.5.80 லட்சமாக உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே, 2024-25-ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது பெற தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நவ.28-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் படவம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை நேரில் அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.