
சங்கராபுரம் வள்ளலார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் அரசியலமைப்பு சட்ட 75ம் ஆண்டு விழா நடந்தது.மன்ற பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார்.செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமுர்த்தி, ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்றத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை குமாரி வரவேற்றார்.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை ஆசிரியர் வாசிக்க மாணவர்கள் உறுதி எடுத்துக் கொண்டனர்.இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவி தீபா சுகுமார், திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி ஆகியோர் சட்டத்தின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களி டையே பேசினர். சக்திவேல் நன்றி கூறினார்