
சங்கராபுரத்தில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்ட தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். சுப்பிரமணியன், மாரி, சிவபெருமான், ஏழுமலை முன்னிலை வகித்தனர். டி.கே., ரேடு ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர் நிலையிலிருந்து கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு பணிகாலத்தை முழுமையாக கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வட்ட ஆலோசகர் ராமர், சுப்பிரமணியன், வட்ட இணை செயலாளர் செல்வம், அமைப்பாளர் தரணிதரன், துணை தலைவர் சாந்தி, மகளிரணி செயலாளர் அஞ்சலை ஆகியோர் பேசினர்.பொருளாளர் இளங்கோவன் நன்றி கூறினார்.