
வங்கக்கடலில் இன்று (நவம்பர் 27) மாலை ஃபெங்கல் புயல் உருவாக உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 16 தீயணைப்பு நிலையங்களில் 400 க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறை வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.