
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேப்பூர் அடுத்துள்ள நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலைப்பள்ளியில், இன்று (நவம்பர் 27) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீ பானுமதி அம்மாள் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற மாபெரும் இலவச பொது மருத்துவ முகாமை திராவிட முன்னேற்றக் கழக நல்லூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி துவக்கி வைத்தார். உடன் பள்ளி தாளாளர் அன்புக்குமரன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.