
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஞானசம்பந்தரி மாரிமுத்து விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து பிளஸ் 1 மாணவர்கள் 150 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.