நெய்வேலி ஜெயராம் நகர் பகுதியைச் சேர்ந்த நூர்முகமது மனைவி யாஷிகாபானு என்பவர் அரசு பேருந்தில் பயணம் செய்த போது கைப்பையில் வைத்திருந்த 5 1/2 பவுன் நகையை தவறவிட்டார். அதே பேருந்தில் பயணம் செய்த குறிஞ்சிப்பாடி பகுதியைச் சேர்ந்த கௌசல்யா என்பவர் கீழே கிடந்த கைப்பையை எடுத்துப் பார்த்தபோது நகை இருந்ததால் அதை உடனடியாக குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
விசாரணை செய்து நகையை உரியவரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். கௌசல்யாவின் நேர்மையை பாராட்டி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தார்கள்.