கோக்கு மாக்கு
Trending

ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய அபிஷேகம்

கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு நேற்று (நவம்பர் 27) சிறப்பு திரவிய அபிஷேகங்கள் நடந்தன.

இதனையொட்டி அதிகாலை 6:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கி, பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தன. காலை 10:30 மணிக்கு 108 விசேஷ திரவியங்கள் மற்றும் 108 கனி வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன,ஐயப்ப பக்தர்களின் சரணகோஷங்களுடன் மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து 1:00 மணிக்கு புஷ்பாஞ்சலி நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மாலை 5:00 மணிக்கு சுவாமி கொலுவிருத்தலும், திருக்கோவிலூர் நாதஸ்வர கலைஞர்களின் இசைவிழாவும் நடந்தன.

வைபவங்களை மணிகண்டன் குருக்கள் மற்றும் வேதாச்சல சங்கர குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button