கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள போட்டோ ஸ்டுடியோவில் நேற்று (நவம்பர் 27) காலை 9:30 மணிக்கு போட்டோ எடுப்பதற்காக சிலர் வந்திருந்தனர். அப்போது கூட்டத்தை சாதகமாக பயன்படுத்திய வாலிபர் ஒருவர் மேஜையில் வைத்திருந்த ரூ.40,000 மதிப்புள்ள மொபைலை எடுத்துக்கொண்டு ஓட முயன்றார்.
அப்போது சுதாரித்த பணியாளர்கள் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் துரத்தி பிடித்து விசாரித்தனர். இதில் அந்த நபர் சித்தலூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பது தெரியவந்தது. செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.