மாவட்ட அளவில் நடந்த சிலம்ப போட்டியில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் சாதனை படைத்தனர். பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் சங்கராபுரம் சூர்யா ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவிகள் அரிஷ்மா, சுவேதா, நிஷாலினி, ரோஸ்லின் ஆகியோர் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு பிரிவுகளில் கலந்துகொண்டு விளையாடி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர்.
இப்போட்டியில் மாணவிகள் அரிஷ்மா மற்றும் சுவேதா முதலிடம் பிடித்து மாநில அளவில் நடக்கவிருக்கும் சிலம்ப போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளை பயிற்சியாளர் சூரியமூர்த்தி, தமிழ்செல்வன் ஆகியோர் பாராட்டினர்.