கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
சங்கராபுரம் செயின்ட் ஜோசப், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் அரசு ஆண்கள் பள்ளி, ஏ.கே.டி. பள்ளி மைதானத்தில் தேக்வோண்டோ, ஜூடோ, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக், கேரம் போர்டு, பீச் வாலிபால், நீச்சல், சிலம்பம், ரோடு சைக்கிளிங் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது.
இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலரைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்த சிலம்பம் விளையாட்டு போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் துவக்கி வைத்தார்.
பள்ளி தலைமையாசிரியர் கலாபன் வாழ்த்துரை வழங்கினார். போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.