கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வட்டார வாரியாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட, அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கள்ளக்குறிச்சி வட்டார பகுதியை சேர்ந்தவர்களுக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று (நவம்பர் 27) நடத்தப்பட்டது.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.
அரசு எலும்பு முறிவு மருத்துவர் கோகுல்ராஜ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் விஜயகுமார், கண் மருத்துவர் லோகநாயகி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவக் குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர்.
கலந்துகொண்ட 125 பேர்களில் 41 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவச் சான்றுடன் யுடிஐடி பதிவெண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.