கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நேற்று (நவம்பர் 27) பள்ளி முடிந்து பேருந்திற்காக காத்திருந்தனர். அப்போது மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் திடீரென மாணவர்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசாரைப் பார்த்த மாணவர்கள் தெறித்து ஓடினர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில், செல்ஃபி எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் தாக்கிக்கொண்டதாக கூறியுள்ளனர்.