கள்ளக்குறிச்சி எஸ். பி. அலுவலகத்தில் நேற்று(நவம்பர் 27) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு எஸ். பி. ரஜத் சதுர்வேதி தலைமை தாங்கி, மனுதாரர்களை நேரில் அழைத்து மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அதில் காவல் நிலையங்களில் முறையான தீர்வு கிடைக்காத 22 மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சக்தி உட்பட மற்றும் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் மனுதாரர்கள் பலர் பங்கேற்றனர்.