சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் (நவம்பர் 26) காலை 11 மணியளவில் சின்னசேலம் – பாண்டியங்குப்பம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 இருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் பைக்கிற்கு ஆவணம் இல்லாதது தெரியவந்தது. சந்தேகமடைந்த போலீசார் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.இதில் இருவரும் நாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் (28) மற்றும் சின்னதுரை (23) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் சின்னசேலம் பகுதியில் பல இடங்களில் பைக்குகளை திருடி சென்றது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 9 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.