கள்ளக்குறிச்சி மாவட்டம் பாலி கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மனநலம் குன்றிய பெண் பாலியல் வழக்கில் உடனே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பாமல் குற்றவாளியுடன் இணைந்து மருத்துவ தடயங்களை அழித்த விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் தலைமை காவலர் வேல்முருகனை கைது செய்ய வலியுறுத்தி இன்று (நவம்பர் 28) காலை பாலி கிராமத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இந்த தெருமுனை கூட்டத்தில் மக்கள் அதிகாரம் வினாயகம் தலைமை தாங்கினார். மணிபாலன், பஞ்சநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளை செயலாளர், பிரோம் நிர்வாகி மணிமுத்து, ஊர் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.