திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், முனுகப்பட்டு ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் ரூ. 4.31 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், ரூ. 4 லட்சத்து 31 ஆயிரத்து 600 ரொக்கம், 35 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
இந்தப் பணி அறநிலையத்துறை ஆய்வாளர்கள் ப. முத்துசாமி, இரா. நடராசன், செயல் அலுவலர் கு. ஹரிஹரன், கணக்காளர் லோ. ஜெகதீசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வி. தமிழ்செல்வன் முன்னிலையில் நடைபெற்றது.