வங்கியில் போலியான ஆவணங்கள் சமர்ப்பித்து இரண்டு புள்ளி 60 கோடி கடன் வாங்கியவருக்கு உடந்தையாக இருந்த முன்னாள் வங்கி அதிகாரி கைது…
பேங்க் ஆப் பரோடா வங்கியின் உதவி பொது மேலாளர் லீனா கோஹைன் என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து Lemooria foods நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் ராஜலக்ஷ்மி சதீஷ் பாபு ஆகிய மூன்று பேர் கூட்டாக சேர்ந்து வங்கியில் 2.60 கோடி கடன் பெற்று அதில் 1.80 கோடி கடன் தொகையை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்திருந்தனர், புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் ராஜலட்சுமி, சதீஷ் பாபு மற்றும் ராஜா ஆகியோர் வங்கியில் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது இதனை அடுத்து போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான பேங்க் ஆப் பரோடா வங்கியின் முன்னாள் உதவி பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் என்பவர் lemooria foods நிறுவனம் வாங்காத இயந்திரங்களை வாங்கியதாக காட்டி போலியான ஆவணங்கள் கொடுத்துள்ளது தெரியவந்தது இதனை எடுத்து நீண்ட நாட்களாக தேடி தலை மறைவாக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவரை ஹைதராபாத்தில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…