திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது. செங்கம் நகர திமுக சார்பில் நடைபெற்ற விழாவில், நகரச் செயலர் அன்பழகன் தலைமையில், மேல்பாளையம் அரசு மாற்றுத்திறனாளி பள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து, மாணவர்களுக்கு கேக், பிஸ்கட், இனிப்பு, பழங்கள் வழங்கப்பட்டன.பின்னர், துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில், ஓன்றியச் செயலர்கள் ஏழுமலை, மனோகரன், செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் முருகன், நகர அவைத்தலைவர் முத்துகிருஷ்ணன், மேல்பாளையம் கவுன்சிலர் முருகமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.