திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, செங்கம் வட்டம் பரமனந்தல் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் அவர்களின் தலைமையில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி துவக்கி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர்கள் ஏழுமலை, செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் சகுந்தலா ராமஜெயம் உள்ளிட்ட மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.