திருவண்ணாமலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞரணி சார்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மூத்த அரசு வழக்குரைஞர் கே.வி. மனோகரன் தலைமை வகித்தார்.
மூத்த அரசு வழக்குரைஞர்கள் புகழேந்தி, நா. பழனி, அருள்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை அனைத்து வழக்குரைஞர்கள் வாசித்தனர். இதில், வழக்குரைஞர்கள் சீனுவாசன், முரளி, வீணாதேவி, தெற்கு மாவட்ட வழக்குரைஞர அணியின் அமைப்பாளர் இரா. கார்த்திகேயன், நிர்வாகிகள் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.