கள்ளக்குறிச்சி அண்ணா நகர் சேலம் சாலை, மின்வாரிய அலுவலகம் அருகே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாரத மாதா நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று காலை 8 மணிக்கு நடந்தது. ஆர்.எஸ்.எஸ். கோட்ட தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.நகர தலைவர் தாமோதரன் வரவேற்றார்.
மாவட்ட தலைவர் மகாதேவன் குத்துவிளக்கேற்றி நூலகத்தை துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நகர துணை தலைவர் சுப்ரமணி, மாவட்ட நிர்வாகிகள் மதன்குமார், குருபிரசாந்த் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.