கல்வராயன்மலையில் உள்ள இன்னாடு கிராமத்தில் மலைவாழ் உண்டு உறைவிடத்துக்கு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், பள்ளியில் சமையல் செய்த பாத்திரங்களை மாணவிகள் கழுவும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.
மாணவிகளை சமையல் பாத்திரங்களை கழுவ செய்தது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, பள்ளி தலைமையாசிரியர் ஜெபஸ்டீன், சமையலர் ராதிகா ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து, கள்ளக்குறிச்சி மாவட்ட பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.