கள்ளக்குறிச்சி மர சிற்பிக்கு சிறந்த கைவினைஞர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மர சிற்பத்திற்கு புகழ் பெற்ற பகுதியாகும். இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாபலிபுரத்தில் தமிழ்நாடு கைத்தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் விருது வழங்கும் விழா நடந்தது.இதில் கள்ளக்குறிச்சி மர சிற்பி ராஜ்குமாருக்கு, தமிழக அரசின் சிறந்த கைவினைஞர் விருதினை அமைச்சர் அன்பரசன் வழங்கினார். கைத்தொழில் துறை அரசு செயலாளர் அமுதவள்ளி, மேலாண் இயக்குனர் அமிர்தஜோதி உடனிருந்தனர்.