கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு ஆட்பட்ட கீழக்குப்பம் துணை மின் நிலையத்திலிருந்து முடப்பள்ளி கிராமம் வரை உயர் அழுத்த மின்பாதை அமைக்க துவக்க விழா 28-11-2024 இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர் சபா. பாலமுருகன், செயற்பொறியாளர் TV. ராமச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், பொதுக்குழு உறுப்பினர் K. அறிவழகன், மாவட்ட பிரதிநிதி GR. ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் அருள்முருகன், ஞானசேகர், செந்தாமரைக்கண்ணன், அஞ்சுலட்சம் பாலகிருஷ்ணன், மற்றும் நந்தகோபால் கீழக்குப்பம் அன்பழகன் மற்றும் உதவி மின் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.