இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் விருத்தாசலம் KKD விளையாட்டு அரங்கில் மாபெரும் இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் பரிசுகள் வழங்கினார்.
உடன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சி. வெ.க. வெங்கடேசன், விருத்தாசலம் நகர கழக செயலாளர் தண்டபாணி, ஒன்றிய கழக செயலாளர்கள் வேல்முருகன், கனக கோவிந்தசாமி, ஆசைதம்பி, நகரமன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் குருநாதன், பிரபாகரன், பிரபு, பெரியசாமி, முரளி, சபா ஆகியோர் கலந்து கொண்டனர்.