கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஏணிக்காரன்தோட்டம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவை ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். உடன் மேயர் சுந்தரி ராஜா, ஆணையர் அனு உள்ளிட்டோர் உள்ளனர்.