
கடலூர் மாவட்டத்தில் ஃபெங்கல் புயலை எதிர்கொள்ள துணை ஆட்சியர் நிலையில் 14 மண்டலங்கள், 6 நகராட்சி, 14 பேரூராட்சி, மாநகராட்சிக்கு அலுவலர்கள் நியமனம். 28 பாதுகாப்பு மையங்கள், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் 191 தற்காலிக தங்குமிடங்கள், 30 தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயாராக உள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.