திருவண்ணாமலை அடுத்த சானாநந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சின்னராசு என்ற வாலிபர். அதே கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான தனலட்சுமி என்பவரை காதலித்து 7 மாதம் கர்ப்பம் ஆக்கிய நிலையில் தற்போது காதலித்த பெண் குள்ளமாக இருப்பதாக கூறி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தனலட்சுமி குடும்பத்தினர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சின்னராசுவை அழைத்து விசாரணை செய்தனர்.இந்த விசாரணையில் இரு வீட்டாரும் திருமணத்திற்க ஒத்துவந்த நிலையில் மாப்பிள்ளை சின்னராசு திருமணம் செய்து கொள்ள முரண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தனலட்சுமி குடும்பத்தினர் போலீசாரின் முன்னிலையிலேயே திருமணம் நடைபெற வேண்டும் என்று கூறியதால் திருவண்ணாமலை பெரியார் சிலை அருகில் உள்ள கெங்கை அம்மன் கோவில் விநாயகர் சன்னதி முன்பாக சாலையோர பிளாட்பார்மில் ஊர் மக்கள் பார்க்க போலீசார் படம் பிடிக்க இரு வீட்டார் முன்னிலையில் சின்னராசு தனலட்சுமி திருமணம் நடைபெற்றது.காதலித்த பெண்ணை கர்ப்பம் ஆக்கி கைப்பிடிக்க மாட்டேன் குள்ளமாக இருக்கிறாள் என தட்டிக்கழித்த இளைஞரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்த பொழுது இந்த திருமணம் திருமணமே செய்யாத விநாயகர் சன்னதி முன்பு நடைபெற்றது