திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த பரமனந்தல், கொட்டாவூர், குப்பனத்தம், கல்லாத்தூர் ஆகிய ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களுக்கான மனுநீதி நாள் முகாம் பரமனந்தல் கிராமத்தில் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, பல்வேறு துறைகள் மூலம் 683 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், அவர் பேசியது: திருவண்ணாமலை மாவட்டம் கல்வியில் பின் தங்கியுள்ளதற்கான காரணம் குறித்து குழு அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்கள் எந்தெந்த பாடங்களில் அதிகம் தோல்வி பெறாமல் உள்ளனர், அதற்கான காரணம் என்ன என்பதைக கண்டறிந்து, தோல்வி விகிதத்தை குறைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.