
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஸ்ரீதர்மசம்பந்தினி உடனுறை ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் உள்ள மூலவர் ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீதர்மசம்பந்தினி, பிரதான நந்திக்கு பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.