திருவண்ணாமலை ஸ்டேட் வங்கி அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டச் செயலர் ப. செல்வன் தலைமை வகித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார் கோரிக்கையை விளக்கிப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் வழங்குவதில் பல ஆயிரம் கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஊழலில் சிக்கியுள்ள தொழிலதிபர் அதானியை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.