திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் தொரப்பாடி, நரசிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளுக்கு வாய் புண்ணு நோய் தாக்கப்பட்டிருப்பதாகவும், இதனால் ஆடுகள் வாய் முழுவதும் புண் ஏற்பட்டு நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், குட்டியிலிருந்து பார்த்துப் பார்த்து வளர்த்து வந்த ஆடுகள் திடீரென்று உயிரிழப்பதாகவும் ஆடு வளர்க்கும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து ஆடுகளுக்கு உரிய மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.