கடலூர் வில்வநகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் அமர்நாத் இவர் கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு வார்டுக்குள் சென்று அங்கிருந்த செவிலியர் ஒருவரை ஆபாசமாக திட்டி பணி செய்ய விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது. இதுபற்றி அந்த செவிலியர் அங்கு பணியில் இருந்த சிறப்புசப்-இன்ஸ்பெக்டர் ரவியிடம் கூறினார். உடனே ரவி, அமர்நாத்தை தட்டிக்கேட்ட போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து புதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அமர்நாத்தை கைது செய்தனர்.