கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயிலில் திருப்பணி பணிக்காக நேற்று (நவம்பர் 29) கால்கோள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இது மட்டுமில்லாமல் கோவிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.