தமிழகத்தில் புயல் காரணமாக சில மாவட்டங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசப்படும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. அதன்பேரில் கடலூர் மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் வழங்கப்பட்டது.
அதேபோல் கடலூர் மாவட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் திட்டக்குடி பகுதிகளிலும் இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. காற்று வீசுவது இல்லாமல் லேசான மழை பெய்து வரும் நிலையால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.