கடலூரில் கடந்த 19ஆம் தேதி லாரன்ஸ் சாலையில் தொங்கிக் கொண்டிருந்த விளம்பர பலகை காற்றில் அறுந்து விழுந்ததில், அவ்வழியே பயணம் செய்த ஒருவர் காயமடைந்தார். இதைத்தொடர்ந்து பல இடங்களில் இருந்த விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வந்தது.
இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் நெருங்குவதால் அகற்றப்படாமல் இருந்த ஒருசில விளம்பர பலகைகள் மற்றும் அகற்றப்பட்ட விளம்பர பலகைகள் இன்று (நவம்பர் 30) காலை வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்லும் பணிகள் நடைபெற்றது.