
கடலூர் மாவட்டம் நெய்வேலி என். எல். சி இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தின் சினெர்ஜி ஹாலில் நேற்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட 75 வது ஆண்டை என்எல்சி இந்தியா லிமிடெட் கடைப்பிடித்தது. இந்நிகழ்ச்சியில் நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதுமட்டுமல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதிமொழி எடுக்கப்பட்டது.