கோக்கு மாக்கு
Trending

ரூ.77 லட்சத்தில் அன்னதான கூடம்

தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது. அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் திருமூர்த்தி தெரிவித்ததாவது: வடக்கனந்தல் உமா மகேஸ்வரி, சின்னசேலம் திரவுபதி அம்மன், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆகிய 3 கோவில்களில் தினசரி மதியம் தலா 50 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

அன்னதானத்திற்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து வருகிறது. அதற்காக இந்த 3 கோவில்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலை புதுபபிக்க அறநிலையத்துறை சார்பில் 77 லட்சம் ரூபாய் மதிப்பில் அன்னதான கூடம் கட்டப்பட உள்ளது என தெரிவித்தார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button