திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகத்தில் நூலகராக பணிபுரியும் கவிஞர் ஜா. தமீம் எழுதிய ‘நினைவுகளைச் சுமக்கும் திண்ணைகள்’ ஹைக்கூ கவிதை நூல் அறிமுக விழா கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு கௌரவ தலைவர் அன்சாரி தலைமை தாங்கினார்.
கோட்டை தமிழ்ச் சங்க தலைவர் பீ. ரகமத்துல்லா, தலைமை ஆசிரியர் க. வாசு, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலைஞர் முத்தமிழ் சங்க தலைவர் வந்தை குமரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற கவிஞர் அ. ஜ. இஷாக், ஹைக்கூ கவிதை எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றியும், அது சமூகத்தின் அவலங்களை வெளிக்காட்டுவதாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.