
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த புதுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரப்பட்டு, பெரியேரி, தென் மகாதேவமங்கலம், காஞ்சி, கடலாடி, வாசுதேவன்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே ஃபென்சல் புயல் எதிரொலியாக மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.