பெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் தெருக்களிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஏறி குளம் குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள் அதி வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை அடுத்த பள்ளியம்பட்டு கிராமத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சாலையில் சத்தமாக இடி மின்னல் தாக்கியதில் சாலை இரண்டாக பிளந்து ஜல்லி கற்கள் தூக்கி வீசப்பட்டது, இதனால் அப்பகுதியில் சாலையில் செல்வதற்கான பாதை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் இடி விழுந்து சாலை துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பயத்துடன் இருக்கின்றனர்.ஃபெஞ்சல் புயல் காரணமாக நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக நீர் நிலைகள் அனைத்திலும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கும் நிலையில் பள்ளியம்பட்டு கிராமம் அருகே திடீரென இடி மின்னல் தாக்கியதில் தார் சாலை இரண்டாகப் பிளந்து ஜல்லி கற்கள் அருகாமையில் இருந்த வீடுகளின் மேல் விழுந்ததால் பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர்.