கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சி,மூங்கில்துறைப்பட்டு தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு கிராமம்.
பெஞ்சல் புயலால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இங்கு வசித்து வந்த சுமார் 150 மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது.
சுமார் (1972) 52 ஆண்டுகளுக்கு பிறகு தென்பெண்ணை ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக இந்த ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்க தேவையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார் .
இந்த ஆய்வின்போது பேரூராட்சி தலைவர் வருவாய்த்துறையினர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.